கல்வியியல் கல்லூரிகளின் 150 விரிவுரையாளர்களுக்கு  பதவியுயர்வு

கல்வியியல் கல்லூரிகளின் 150 விரிவுரையாளர்களுக்கு பதவியுயர்வு

கல்வியியல் கல்லூரிகளின் 150 விரிவுரையாளர்களுக்கு பதவியுயர்வு

எழுத்தாளர் Staff Writer

29 Nov, 2013 | 9:32 am

கல்வியியல் கல்லூரிகளின் 150 விரிவுரையாளர்களுக்கு கல்விச் சேவையின் இரண்டாம் தரத்திற்கான பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 7 வருடங்களாக இந்த பதவியுயர்வு வழங்கப்படுவதில் தாமதம் நிலவியிருந்ததாக கல்வி அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மூன்றாம் தரத்தைச் சேர்ந்த விரிவுரையாளர்களுக்கே இந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பதவியுயர்வுகளை வழங்குமாறு வலியுறுத்தி கடந்த காலங்களில் துறைசார் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்