உள்ளக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான அறிவு இலங்கையிடம் காணப்படுகின்றது – சீனா

உள்ளக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான அறிவு இலங்கையிடம் காணப்படுகின்றது – சீனா

உள்ளக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான அறிவு இலங்கையிடம் காணப்படுகின்றது – சீனா

எழுத்தாளர் Staff Writer

29 Nov, 2013 | 8:09 pm

இலங்கை மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் மனித உரிமைகளை மேம்படுத்திக் கொள்ளல் மற்றும் அதனுடன் பொருந்தக்கூடிய உள்ளக சூழலை உருவாக்கிக் கொள்வதற்கும் இருக்கின்ற உரிமைக்கு சர்வதேச சமூகம் மதிப்பளிக்க வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் தமது உள்ளக செயற்பாடுகளை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கான இயலுமை மற்றும் அறிவு காணப்படுவதாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் மனித உரிமை பிரச்சினைகள் குறித்து தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில் சீனா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதைப் போன்றே, தேசிய நல்லிணக்கத்தை நிதர்சனமானதாக மாற்றுவதற்கான செயற்பாடுகளில் இலங்கை முன்னேற்றங்களை அடைந்துள்ளதாகவும் கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் இறைமை, தன்னாதிக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் சீனா சுட்டிக்காட்டியுள்ளது.

மனித உரிமைகள் தொடர்பிலான முரண்பாடுகளுக்கு, உலகின் பல்வேறு நாடுகளும், சமாந்திரமான முறையிலும், பரஸ்பர மதிப்பளித்தல் ஊடாகவும் அமைந்த பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்படவேண்டும் என்பதே சீனாவின் நிலைப்பாடாக உள்ளது.

எந்த விதத்திலேனும், மனித உரிமைகள் அரசியல் மயமாக்கப்படுவதற்கும், அதுதொடர்பில் இரட்டை நிலைப்பாடு பின்பற்றப்படுவதற்கும் கடும் ஆட்சேபனையை வெளியிடுவதாக சீனா சுட்டிக்காட்டியுள்ளது.

எதேனும் ஒரு நாட்டின் மீது, அழுத்தங்களை பிரயோகிப்பதற்காக வேறு நாடுகள் மனித உரிமை விடயத்தை ஆயுதமாகப் பயன்படுத்துவதனையும் தாம் எதிர்ப்பதாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்