இலங்கைக்கான நோர்வே தூதுவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே சந்திப்பு

இலங்கைக்கான நோர்வே தூதுவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே சந்திப்பு

இலங்கைக்கான நோர்வே தூதுவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

29 Nov, 2013 | 7:19 pm

இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிரேட் லொச்சென் இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து வடபகுதியில் புனரமைப்பு பணிகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை நோர்வே தூதுவர் பாராட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் வடமாகாண சபைக்கான தேர்தல் நடத்தியமை தொடர்பில் நோர்வே அரசாங்கம் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் ஜனாதிபதியிடம் கூறியதாக ஜனாதிபதிப் பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

வடபகுதி மக்களின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டினை உறுதிப் படுத்தும் நோக்கில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள மாகாண சபைக்கு ஒத்துழைப்பு நல்குவதற்கு தமது அரசாங்கம் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்