வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழப்பு

வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழப்பு

வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2013 | 12:33 pm

கம்பஹா, ஓவிட்ட பகுதியிலுள்ள உணவகத்திற்கு அருகில் உடலில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இனந்தெரியாத குழுவினர் நடத்திய தாக்குதலில் அவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மற்றுமொரு நபருடன் உணவகத்திற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் தொம்பே வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்