வாகனத் திருத்துனர்கள் 900 பேருக்கு பயிற்சி

வாகனத் திருத்துனர்கள் 900 பேருக்கு பயிற்சி

வாகனத் திருத்துனர்கள் 900 பேருக்கு பயிற்சி

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2013 | 8:58 am

வாகனங்களை திருத்துவது தொடர்பில் நாட்டிலுள்ள அனைத்து வாகன திருத்துனர்களுக்கும் உரிய பயிற்சி வழங்குவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.

மோட்டார் வாகனங்களை திருத்துவது தொடர்பான புதிய தொழில்நுட்ப முறைகளை அவர்களுக்கு பயிற்றுவிக்கவுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எச்.எஸ் ஹரிஸ்சந்திர கூறினார்.

இந்தப் பயிற்சிகளை வழங்குவதற்காக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்திற்கும், தொழில்நுட்ப கற்கை நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

புகை பரிசோதனையின் பின்னர் மீண்டும் எஞ்ஜின்கள் திருத்தப்படவேண்டிய வாகனங்களை திருத்துவதற்கான உரிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக, குருநாகல் மாவட்டத்தின் தொள்ளாயிரம் வாகனத் திருத்துனர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்