முதலாம் தரத்திற்கு தெரிவான மாணவர்களின் பெயர்களை வெளியிட நடவடிக்கை

முதலாம் தரத்திற்கு தெரிவான மாணவர்களின் பெயர்களை வெளியிட நடவடிக்கை

முதலாம் தரத்திற்கு தெரிவான மாணவர்களின் பெயர்களை வெளியிட நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2013 | 8:49 am

முதலாம் தரத்திற்காக பாடசாலைகளுக்கு தெரிவான மாணவர்களின் இறுதி பெயர்ப்பட்டியல் அடுத்த வாரம் முதல் காட்சிப்படுத்தப்படுமென கல்வியமைச்சு தெரிவிக்கின்றது.

தற்போது இந்தப் பட்டியல் மாகாண சபையினால் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், தேசிய பாடசாலைகளுக்கான பட்டியல் தயாரிக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.

ஆயினும், சில பாடசாலைகளில் மேன்முறையீடுகள் தொடர்பில் ஆராயப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், பாடசாலையொன்றில் அனுமதி வழங்குவதே கல்வியமைச்சின் நோக்கமென அமைச்சின் உயரதிகாரி ஒருவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected]ewsfirst.lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்