பெர்லஸ்கோனி பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்

பெர்லஸ்கோனி பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்

பெர்லஸ்கோனி பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றம்

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2013 | 10:55 am

இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனி, அந்த நாட்டு பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் செனட் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு வெற்றிபெற்றுள்ள நிலையில் சில்வியோ பெர்லஸ்கோனி பாராளுமன்றத்திலிருந்து  விலக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் பெர்லஸ்கோனி மீதான வரி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் செனட் சபையின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பெர்லஸ்கோனிக்கு ஆதரவு தெரிவித்து பேரணிகளும் நடத்தப்பட்டுள்ளன.

ஜனநாயகம் குறித்து அனுதாபப்படும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது என இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனி தெரிவித்துள்ளார்.

சுமார் 20 வருடங்களாக இத்தாலியின் அரசியலில் முதன்மை பெற்று விளங்கியவர் சில்வியோ பெர்லஸ்கோனி என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்