தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2013 | 10:26 am

ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது.

மிக விறுவிறுப்பாக நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு ஓட்டத்தால் வெற்றிபெற்ற பாகிஸ்தான் இந்தத் தொடரை தன்வசப்படுத்தியுள்ளது.

போர்ட் எலிசபெத் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் 263 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 45 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 261 ஓட்டங்களைப் பெற்றது.

சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய ஹசிம் அம்லா 98 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் ஜுனைட் கான் 3 விக்கட்களைக் கைப்பற்றினார்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 45 ஓவர்களில் 262 ஓட்டங்களைப் பெற்றது.

சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய அஹமட் ஷெஸாட் 102 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

மழை காரணமாக இந்தப் போட்டி 45 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் பிரகாரம் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் 2-0 என்ற ஆட்டக்கணக்கில் பாகிஸ்தான் முன்னிலை பெற்றுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்