தேசத்திற்கு துரோகம் இழைத்தவர்களே தலைமைத்துவ சபையில் உள்ளனர் – வஜிர நா தேரர்

தேசத்திற்கு துரோகம் இழைத்தவர்களே தலைமைத்துவ சபையில் உள்ளனர் – வஜிர நா தேரர்

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2013 | 9:34 pm

தேசிய ஒற்றுமைக்கான சர்வதேச சமய அமைப்பு இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

தேசிய ஒற்றுமைக்கான சர்வதேச சமய அமைப்பு கலாநிதி கம்புறுகமுவே வஜிர நா தேரர் –

“எமது நாட்டில் உள்ள ஜனநாயக உரிமைகளை உலகிற்கு காண்பிக்கும் நோக்கில் செனல் போ ஊடகவியலாளர்களுக்கு இங்கு வர அனுமதி வழங்கப்பட்டது.   எனினும் துரோக மனப்பான்மையுடனான ஓர் குழு அவர்களை சிறிகொத்தவிற்கு அழைத்துச் சென்று எமது மனித உரிமைகளை அழிவுறச் செய்யும் நோக்கில் செயற்பட்டது.  பொய்யான விதத்தில் செயற்பட்டு இந்த நாட்டிற்கு துரோகம் இளைத்தனர்.  உண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியென்பது இந்த நாட்டில் நீண்ட வரலாற்றைக் கொண்ட ஓர் கட்சியாகும்.  தேசத்திற்கு கௌரவத்தை ஈட்டிக்கொடுத்த டீ.எஸ் சேனாநாயக்க போன்ற தலைவர்கள் இருந்த கட்சியே அது.  எனினும் இன்று இந்தக் கட்சி இந்த நாட்டிற்கு துரோகம் இழைத்து அதனை சர்வதேசத்திற்கும் காண்பித்துள்ளது.  எனவே அவர்கள் தொடர்பில் அறிந்து கொள்ளுமாறு இந்த நாட்டு மக்களுக்கு கூறுகின்றேன்.  தலைமைத்துவ சபையினால் பலன் இல்லை.  தேசத்திற்கு துரோகம் இழைத்தவர்களே தலைமைத்துவ சபையில் உள்ளனர்”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்