தலங்கம பொலிஸ் நிலையத்தின் 25  உத்தியோகத்தர்களுக்கு மேலதிகக் கடமை

தலங்கம பொலிஸ் நிலையத்தின் 25 உத்தியோகத்தர்களுக்கு மேலதிகக் கடமை

தலங்கம பொலிஸ் நிலையத்தின் 25 உத்தியோகத்தர்களுக்கு மேலதிகக் கடமை

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2013 | 9:20 am

தலங்கம பொலிஸ் நிலையத்தில் பதில் பொறுப்பதிகாரி உட்பட 25 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மிரிஹான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு தலங்கம பொலிஸ் நிலையத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸ் நிலையத்தில் தற்போது கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்காக இவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் மீது பொதுமக்களின் நம்பிக்கை குறைவடைந்திருந்தால், அதனை மீளக் கட்டியெழுப்புதற்கு இந்த உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி கூறினார்.

விசேட பொலிஸ் அதிரடிப்படையின் உறுப்பினரின் கொலைச் சம்பவத்தை மறைப்பதற்காக பணம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் தலங்கம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்