சுகாதார ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கின்றது

சுகாதார ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கின்றது

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2013 | 3:57 pm

தாதியர்கள், தகுதிகாண் மற்றும் தற்காலிக மருத்துவ அதிகாரிகளின் ஒன்றிணைந்த சங்கத்தின் 16 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுகாதார உத்தியோகத்தர்கள் நேற்று ஆரம்பித்த பணிபகிஷ்கரிப்பு இன்று தொடர்கின்றது.

வெளிநோயாளர் பிரிவிலுள்ள வைத்தியர்கள் மருந்துச் சீட்டுக்களை வழங்கிய போதிலும் நோயாளர்களுக்கு மருந்துகளை வழங்குவதற்கான மருந்தாளர்கள் இல்லை என எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

பகிஷ்கரிப்பு காரணமாக வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளவரும் நோயளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

650க்கும் அதிகமான வைத்தியசாலைகளில் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக தாதியர், தகுதிகாண் மற்றும் தற்காலிக மருத்துவ  அதிகாரிகளின் ஒன்றிணைந்த சங்கத்தின் ஏற்பாட்டாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.

சம்பள கொடுப்பனவு மற்றும் மேலதிக கொடுப்பனவு நிறுத்தப்பட்டதற்கு எதிராக இந்த பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

16 சுகாதார தொழிற்சங்கங்கள் இணைந்து முன்னெடுத்த அடையாள பணிபகிஷ்கரிப்பை கைவிடுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்