சரியான தகவல்களை வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக செயற்படுவது நியாயமற்றது – அதாவுத செனவிரத்ன

சரியான தகவல்களை வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக செயற்படுவது நியாயமற்றது – அதாவுத செனவிரத்ன

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2013 | 10:00 am

சரியான தகவல்களை வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக செயற்படுவது நியாயமற்றது என கிராமிய விவகார சிரேஷ்ட அமைச்சர் அதாவுத செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடக சுதந்திரம் மீறப்பட்டதாக தெரிவித்து மங்கள சமரவீர, சிரச ரீ.விக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், [quote]அவர்கள் சண்டையிட்டு கொண்டவுடன் அவர்கள் துப்பாக்கிசூடு மேற்கொண்டவுடன் அது தொடர்பில் அறிக்கையிட வேண்டாம் எனறே இவர்கள் கூறுகின்றனர் அப்படிதானே? இப்படி இதற்கு வழக்கு தொடரப்பட்டது போல் மற்றையவற்றிற்கும் வழக்கு தொடர்வார். மற்றைய தொலைகாட்சிகள் மிகவும் அவதானமாக செயற்படவேண்டும். அதாவது தமக்கு அவதூறு கூறினால் அந்த தொலைகாட்சிகள் சரியில்லை. தமக்கு எதிராக செயற்பட்டால். பத்திரிகைகளும் சரியில்லை. அதுதான் இவர்களின் செயற்பாடு. [/quote] எனவும் தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் சரியான தகவல்களை வெளியிட வேண்டும் என சுட்டிக்காட்டிய அமைச்சர், சிரச நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளமை நியாமற்ற செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதவேளை, ஜனாதிபதித் தேர்தலை கருத்திற்கொண்டு, எதிர்கட்சித் தலைவரும், மங்கள சமரவீரவும் செயற்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியற்குழு உறுப்பினர் கே.டி லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்