சச்சின் புகழ் தொடர்பான செய்திகளை வெளியிடத் தடை

சச்சின் புகழ் தொடர்பான செய்திகளை வெளியிடத் தடை

சச்சின் புகழ் தொடர்பான செய்திகளை வெளியிடத் தடை

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2013 | 1:46 pm

கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற இந்திய நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கரின் புகழ் தொடர்பான செய்திகளை பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிடக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தலிபான்கள், இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரை அளவுக்கு அதிகமாக பாகிஸ்தான் ஊடகங்கள் புகழ்வது காலத்துக்குப் பொருத்தமானது அல்ல என தெரிவித்துள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர் சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதில் தமக்கு மாற்றுக்கருத்து இல்லை என்றாலும், அவர் பாகிஸ்தான் நாட்டவர் அல்ல என்பதை மறந்து விடக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

அண்மைக்காலமாக சச்சின் டெண்டுல்கர் குறித்து அனைத்து பாகிஸ்தான் ஊடகங்களும் அதிகளவு கவனம் செலுத்தியிருந்தன.

அத்துடன் சொந்த நாட்டு வீரர்களை மிக மோசமாக ஏற்கமுடியாத விதத்தில் விமர்சிக்கும் பாகிஸ்தான் ஊடகங்களின் மனப்பாங்கு மாறவேண்டும் என்றும் தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட்டின் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரான சச்சின் டெண்டுல்கர் அண்மையில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்