கைதிகள் தப்பியோடிய தினம் உத்தியோகத்தர்கள் கடமையில் இருக்கவில்லை – சிறைச்சாலைகள் திணைக்களம்

கைதிகள் தப்பியோடிய தினம் உத்தியோகத்தர்கள் கடமையில் இருக்கவில்லை – சிறைச்சாலைகள் திணைக்களம்

கைதிகள் தப்பியோடிய தினம் உத்தியோகத்தர்கள் கடமையில் இருக்கவில்லை – சிறைச்சாலைகள் திணைக்களம்

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2013 | 8:03 am

மஹர சிறைச்சாலையில் அண்மையில் கைதிகள் தப்பிச்சென்ற தினம் 24 உத்தியோகத்தர்கள் பணிக்கு சமூகமளிக்கவில்லை என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

கடந்த 23 ஆம் திகதி மாலை சிறைக்கைதிகள் நால்வர் தப்பிச்சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்ரரத்ன பல்லேகம தெரிவித்தார்.

ஆயினும் அன்றைய தினத்தில் 24 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பணிக்கு சமூகமளிக்கவில்லை என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

தற்போது சிறைச்சாலையின் பிரதம உத்தியோகத்தர் தலைமையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

விசாரணை அறிக்கை கிடைத்ததன் பின்னர் அந்த  உத்தியோகத்தர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், தப்பிச்சென்ற கைதிகள் நால்வரும் இதுவரை கைதுசெய்யப்பட்டவில்லை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்ரரத்ன பல்லேகம மேலும் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்