குரகலவில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைப்பு

குரகலவில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைப்பு

குரகலவில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2013 | 12:39 pm

குரகலவில் மீட்கப்பட்ட மனித எச்சத்தின் சில மாதிரிகள் மேலதிக ஆய்வுகளுக்காக பிரித்தானியாவின் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் அந்த மனித எச்சம் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வுகளின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான ஆய்வுகள் கடந்தகாலங்களில் பலாங்கொடை, புதுகல பகுதியில் முன்னெடுக்கப்பட்டதாக தொல்பொருள் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

இதன்போது இலங்கையின் ஆதிகால மனிதன் தொடர்பான சில முக்கிய தகவல்கள் குறித்த சான்றுகள் கிடைத்ததாக திணைக்களம் தெரிவித்தது.

கடந்தவருடம் கண்டுபிடிக்கப்பட்ட குரகல மனித எச்சம் இன்றிலிருந்து பத்தாயிரம் ஆண்டுகள் பழைமையானதாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்