கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2013 | 7:31 pm

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 2 பீடங்களை சேர்ந்த மாணவர்கள் இன்று பகல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் மருத்துவ மற்றும் தாதி பீடங்களுக்கான விரிவுரையாளர் ஒருவரை உடனடியாக வெளியேற்றுமாரி கோரி மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று பகல் 12 மணிமுதல் பிற்பகல் ஒரு மணிவரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2 பீடங்களையும் சேர்ந்த சுமார் 450 மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றிருந்ததாகவும் செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி கிட்ணர் கோபிந்தராஜாவிடம் வினவியபோது, குறிப்பிட்ட விரிவுரையாரை தமது பீடங்களில் இருந்து வெளியேற்றுமாறு மாணவர்கள் மஹஜர் ஒன்றை தமக்கு கையளித்ததாக தெரிவித்தார்.

இதனையடுத்து பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னர் சம்பந்தப்பட்ட விரிவுரையாளரை தற்காலிகமாக விஞ்ஞான பீடத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்ததாக துணைவேந்தர் குறிப்பிட்டார்.

மாணவர்களின் இந்த பிரச்சினைக்கு எதிர்வரும் பேரவைக் கூட்டத்தின்போது நிரந்தர தீர்வொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்