கால்பந்தாட்ட மைதானத்தில் கட்டடம் இடிந்ததில் இருவர் பலி

கால்பந்தாட்ட மைதானத்தில் கட்டடம் இடிந்ததில் இருவர் பலி

கால்பந்தாட்ட மைதானத்தில் கட்டடம் இடிந்ததில் இருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2013 | 11:08 am

பிறேசிலில் கால்பந்தாட்ட மைதானம் ஒன்றில் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

அடுத்த உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெறவிருந்த கட்டடத் தொகுதியிலே விபத்து இடம்பெற்றுள்ளது.

மைதானத்தில் நிர்மாணப்பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பணியாளர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டுவருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்