ஒரு பெண் 15 பவுண் தங்கத்தை மாத்திரமே கொண்டுசெல்ல முடியும் – சுங்கத் திணைக்களம்

ஒரு பெண் 15 பவுண் தங்கத்தை மாத்திரமே கொண்டுசெல்ல முடியும் – சுங்கத் திணைக்களம்

ஒரு பெண் 15 பவுண் தங்கத்தை மாத்திரமே கொண்டுசெல்ல முடியும் – சுங்கத் திணைக்களம்

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2013 | 9:08 am

வெளிநாட்டிற்கு தங்கத்தை எடுத்துச்செல்வதிலும், கொண்டுவருவதிலும் தற்போது காணப்படும் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கு சுங்கத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையர்கள் வெளிநாட்டிற்கு எடுத்துச்செல்லும் தங்கத்தின் அளவை மட்டுப்படுத்தவுள்ளதாக சுங்கப் பேச்சாளரும், சுங்க அத்தியட்சகருமான லெஸ்லி காமினி தெரிவித்தார்.

மீளத் திரும்பும் எதிர்பார்ப்பில், வெளிநாட்டிற்கு செல்லும் இலங்கைப் பெண்ணொருவர் 15 பவுண் தங்கத்தையும், ஆண் 05 பவுண் தங்கத்தையும், சிறார்கள் 05 பவுண் தங்கத்தையும் கொண்டுசெல்ல முடியுமென அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்குமாறாக அதிகளவிலான தங்கத்தை கொண்டுசெல்லும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், அந்தத் தங்கம் அரசுடமையாக்கப்படும் எனவும் சுங்கப் பேச்சாளர் கூறினார்.

கடந்த சில தினங்களில் அதிகளவிலான இலங்கையர்கள் தங்கம் கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக லெஸ்லி காமினி தெரிவித்தார்.

இரண்டு தினங்களுக்கு முன்னர், கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவிற்கு பயணித்த 26 இலங்கையர்கள் அதிகளவிலான தங்கத்தை கொண்டுசென்றமைக்காக இந்தியாவில் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

எனவே, சுங்க திணைக்களத்தின் அதிகாரிகளை மீறி, இவ்வாறு பெருந்தொகையான தங்கத்தை எவ்வாறு கொண்டுசெல்ல முடியுமென்ற கேள்வி எழுவதாக சுங்கப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

எனவே, உயர்மட்ட அதிகாரிகள் பலருடனும் கலந்துரையாடி இந்தத் தீர்மானத்தை எடுத்ததாகவும் சுங்கப் பேச்சாளரும், சுங்க அத்தியட்சகருமான லெஸ்லி காமினி கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்