ஒத்துழைத்தால் மட்டுமே உதவி கிடைக்கும் நிலையை மாற்ற வேண்டும்; த. தே.கூ வலியுறுத்தல்

ஒத்துழைத்தால் மட்டுமே உதவி கிடைக்கும் நிலையை மாற்ற வேண்டும்; த. தே.கூ வலியுறுத்தல்

ஒத்துழைத்தால் மட்டுமே உதவி கிடைக்கும் நிலையை மாற்ற வேண்டும்; த. தே.கூ வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2013 | 5:37 pm

அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினால் மாத்திரமே தமிழ் மக்களுக்கு உதவிகள் கிடைக்கும் என்ற நிலையை மாற்ற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் இன்று வழியுறுத்தியுள்ளது.

வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது கூட்டமைப்பின்  பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா சம்பந்தன் இதனை வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் விவாதத்தில் கலந்துகொண்டு  உரையாற்றிக்கொண்டிருக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் பீ.பியசேன இடையூறு விளைவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் கருத்து வெளியீடுவதற்கான சந்தர்பபம் உறுப்பினர்களுக்கு இருக்க வேண்டும் என இரா. சம்பந்தன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தீர்வை காணும் நோக்கில் பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்படவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

குழுக்களின் பிரதித் தலைவர் சந்திர குமார முருகேசு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வரவு – செலவுத் திட்டமொன்றே இம்முறை சமர்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை கருத்திற்கொண்டே வரவு – செலவுத் திட்டம் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மக்களின் சக்தி தொடர்பில் அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளனர்.

இதன் பிரதிபலிப்பாகவே தாதியர்களின் பணி பகிஷ்கரிப்பை தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளனர்.

செல்வாக்குமிக்க ஒருசிலரின் நலனுக்காக மாத்திரமே அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுப்பதாகவும் எதிரக்கட்சி உறுப்பினர்கள் குறறம் சுமத்தியுள்ளனர்.

வரவு – செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் போராசிரியர் ஜி.எல்.பீரீஸ் பொதுநலவாய மாநாட்டினால் இலங்கைக்கு பல்வேறு நன்மைகள் கிடைத்துள்ளதாக சபையில் அறிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்