ஆசிரியையை முழந்தாளிட செய்த வழக்கின் சாட்சிகள் அனைத்தும் பதிவு

ஆசிரியையை முழந்தாளிட செய்த வழக்கின் சாட்சிகள் அனைத்தும் பதிவு

ஆசிரியையை முழந்தாளிட செய்த வழக்கின் சாட்சிகள் அனைத்தும் பதிவு

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2013 | 1:41 pm

ஆனமடு நவகத்தேகம நவோதய பாடசாலை ஆசிரியை ஒருவரை முழந்தாளிட வைத்த சம்பவம் தொடர்பான வழக்கின் அனைத்து சாட்சியங்களும் புத்தளம் மேல் நீதிமன்றத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

அத்துடன் இந்த சம்பவத்தை நேரில் கண்டவரின் சாட்சியம் புத்தளம் மேல் நீதிமன்றத்தில் நேற்று கடைசியாக பதிவுசெய்யப்பட்டதுடன்,  இதுதொடர்பான வழக்கை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கடந்த ஜூலை மாதமளவில் நவகத்தேகம நவோதயா பாடசாலையின் ஆசிரியை முழந்தாளிட வைத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், வட மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து இடம்பெற்ற விசாரணைகளின்போது பிரதிவாதியான வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருக்கு பிணை வழங்கப்பட்டிருந்ததுடன், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகளின் கோரிக்கைக்கு அமைய பிணை நிபந்தனைகளை புத்தளம் மேல் நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.

இதற்கமைய மாதாந்தம் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நவகத்தேகம பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்