அமைச்சர் பொ.ஐங்கரநேசனின் வீட்டின் மீது தாக்குதல்; விசாரணைகள் ஆரம்பம்

அமைச்சர் பொ.ஐங்கரநேசனின் வீட்டின் மீது தாக்குதல்; விசாரணைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2013 | 1:00 pm

வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ். கோப்பாயில் அமைந்துள்ள அவரது வீட்டின் மீது இன்று அதிகாலை 3 மணியளவில் கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

சம்பவம் குறித்து பொலிஸாரிடம் முறைபாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கல் வீச்சில் வட மாகாண விவசாய அமைச்சரது வீட்டின் யன்னல்களுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, தாக்குதலில் வீட்டிலிருந்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

தாக்குதல் தொடர்பில் யாழ். பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்