முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைப்பது தொடர்பில் முறைப்பாடு

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைப்பது தொடர்பில் முறைப்பாடு

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைப்பது தொடர்பில் முறைப்பாடு

எழுத்தாளர் Staff Writer

27 Nov, 2013 | 9:04 am

2014 ஆம் ஆண்டுக்காக முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும்போது ஏற்படுகின்ற அசௌகரியங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துவருவதாக மேல் மாகாண கல்வி திணைக்களம் அறிவித்துள்ளது.

தொலைபேசிகள் மற்றும் கடிதங்கள் மூலம் இந்த  முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக மேல் மாகாண கல்வி பணிப்பாளர் எஸ்.ரீ.கொடிகார தெரிவித்துள்ளார்.

சில பாடசாலைகளில் வலுக்கட்டாயமாக அனுமதிக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும்,  மாணவர்களை சேர்ப்பதற்கான நேர்முக பரீட்கைள் உரிய முறையில் நடாத்தப்படுவதில்லை எனவும் தெரிவித்து அநாமதேய கடிதங்கள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அனைத்து பாடசாலை அதிபர்களிடமும் விசாரணைகளை  மேற்கொண்டுவருகின்றபோதிலும் இதுவரை எவ்வித தகவல்களும் பதிவாகவில்லை என எஸ்.டீ.கொடிகார குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்