பேலியகொடை நகர சபையின் வரவு-செலவு திட்டம்  மீண்டும் தோல்வி

பேலியகொடை நகர சபையின் வரவு-செலவு திட்டம் மீண்டும் தோல்வி

பேலியகொடை நகர சபையின் வரவு-செலவு திட்டம் மீண்டும் தோல்வி

எழுத்தாளர் Staff Writer

27 Nov, 2013 | 8:34 pm

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அதிகாரத்தின் கீழுள்ள பேலியகொடை நகர சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இம்முறை 03 மேலதிக வாக்குகளால் வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியின் 03 உறுப்பினர்களும், ஆளுங்கட்சியின் 03 உறுப்பினர்களுமாக வரவு-செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

இதேவேளை, இரண்டாவது முறையாகவும் வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளதால் உள்ளூராட்சிமன்ற திருத்த சட்டமூலத்தின் புதிய கோட்பாடுகளுக்கு அமைய, தற்போதைய தவிசாளர் பதவி விலகியுள்ளதாகக் கருதி நடவடிக்கை எடுப்பதாக மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சந்ராணி சமரகோன் தெரிவித்தார்.

வரவு – செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டமை தொடர்பில் பேலியகொட நகர சபையின் செயலாளர் தமக்கு அறிவித்துள்ளதாக மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, பேலியகொடை நகர சபையின் எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாட உள்ளதாகவும் மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்