புதிய பரம்பரை வருவதை தத்ரூபமாக எடுத்துக்காட்டுகின்றோம் – விக்னேஸ்வரன்

புதிய பரம்பரை வருவதை தத்ரூபமாக எடுத்துக்காட்டுகின்றோம் – விக்னேஸ்வரன்

புதிய பரம்பரை வருவதை தத்ரூபமாக எடுத்துக்காட்டுகின்றோம் – விக்னேஸ்வரன்

எழுத்தாளர் Staff Writer

27 Nov, 2013 | 10:19 pm

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற மரநடுகை நிகழ்வொன்றில் வட மாகாண முதலமைச்சர் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார்.

வட மாகாண கல்வி அமைச்சர் அலுவலகத்தில் இந்த மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது.

விட்டுச் சென்ற பரம்பரைக்குப் பதிலாக புதிய பரம்பரை வருவதை தத்ரூபமாக எடுத்துக் காட்டும் வகையில் மரங்கள் நடப்படுவதாக நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்து :-

“ஒரு பரம்பரை எம்மை விட்டு சென்றபடியினால் புதிய பரம்பரை வருவதை நாங்கள் ஒரு தத்ரூபமாக எடுத்துக்காட்டுவதாகத் தான் இந்த மரங்களை நாங்கள் நடுகின்றோம்.ஏனென்றால் எங்களுடைய மக்களில் பல இளைஞர் யுவதிகள் எங்களை விட்டு சென்றுவிட்டார்கள்.எங்களுடைய வாழ்க்கையில் இனி எங்களுடைய இளைஞர் சமுதாயத்தில் ஒரு மேம்பாடு வர வேண்டுமெனில் எங்களுக்கு மாணவ சமுதாயம் தேவை. குழந்தைகள் தேவை  பிள்ளைகள் தேவை.அதை  எடுத்துக்காட்டும் விதமாகத் தான் இந்த மரங்களை நாங்கள் நடுகின்றோம்.அதாவது இந்த விதத்தில் மரங்களை நாங்கள் நடுவதனால் நாங்கள் எங்களுடைய சுற்றுச்சூழலை நல்லதொரு விதத்தில் வைத்திரு்க்கிறமோ அதேபோன்று தான் எங்களுடைய வாழ்க்கையிலும்  ஒரு மறுமலர்ச்சி வர வேண்டும்  என்று அந்த மறுமலர்ச்சியை எடுத்துக்காட்டுவதன் அர்த்தமாகத் தான் அதன் ஒரு அடையாளச் சின்னமாகத் தான் இந்த மரங்களை நாட்டுகின்றோம்,இப்போது பார்த்தீ்ர்களனால் வட மாகாணத்தில்  ஏ 9 வீதியில் 2 பக்கத்திலும் இருந்த அத்தனை மரங்களும் நல்ல காடுகளாக இருந்த இடங்கள் எல்லாம் வெறும் தரைகளாக மாறிவிட்டது.அது எங்கே போனது எப்படி போனது யார் கொண்டு போனது என்பது தொடர்பில் ஒரு சர்வதேச விசாரணை வைத்தால் தான் தெரியவரும் என்று நான் நினைக்கிறேன்.அவை அனைத்தும் போய்விட்டது.ஆனால் புதிய மரங்கள் தேவையாக இருக்கின்றது. அதேமாதிரித் தான் இது.அந்த மரங்களை நாங்கள் திரும்பவும் வரவழைக்க வேண்’டும்.திரும்பவும் அவற்றை வளர விட வேண்டும்.”

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்