பணிப்பகிஷ்கரிப்பில் தாதியர், உதவி மருத்துவ சேவையாளர் ஒன்றியம்

பணிப்பகிஷ்கரிப்பில் தாதியர், உதவி மருத்துவ சேவையாளர் ஒன்றியம்

பணிப்பகிஷ்கரிப்பில் தாதியர், உதவி மருத்துவ சேவையாளர் ஒன்றியம்

எழுத்தாளர் Staff Writer

27 Nov, 2013 | 9:41 am

தாதியர் மற்றும் உதவி மருத்துவ சேவையாளர் ஒன்றியத்தின் 16 தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சுகாதார உத்தியோகத்தர்கள் நாடளாவிய ரீதியில் இன்று காலை 7 மணி தொடக்கம் 48 மணி நேர பணிப் பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் 600 வைத்தியசாலைகளில் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெறுவதாக தாதியர் மற்றும் உதவி மருத்துவ சேவையாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சமன் ரத்னப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

பிரதானமாக சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் உரிய முறையில் வழங்கப்படாமை, போதிய தொழிற்பயிற்சிகள் அளிக்கப்படாமை போன்ற காரணங்களை முன்வைத்து இந்தப் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதாரதுறையுடன் தொடர்புடைய ஊழியர்களுக்கு சம்பள அதிகரிகப்பு வழங்கப்பட்டபோதிலும் மருத்துவ உதவியாளர்களுக்கு அது வழங்கப்படவில்லை என சமன் ரத்னப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விவகாரங்கள் குறித்து திறைசேரிக்கு அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்தும் தாதியர் மற்றும் உதவி மருத்துவ சேவையாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சமன் ரத்னப்பிரிய அதிருப்தி வெளியிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்