நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் உயிரிழப்பு; கொலையென உறுதி

நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் உயிரிழப்பு; கொலையென உறுதி

எழுத்தாளர் Staff Writer

27 Nov, 2013 | 8:14 pm

யாழ். நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் தானியல் ரெக்சிகன் கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று முற்பகல் யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

தலையில் காயங்களுடன் பிரதேச சபைத் தலைவர், அவரது மனைவியினால் புங்குடுதீவு வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மரணம் தொடர்பிலான பிரேத பரிசோதனை யாழ். வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றதுடன், தலையில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளமை இதன்போது கண்டறியப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்