நாடு முழுவதும் வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம்

நாடு முழுவதும் வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம்

நாடு முழுவதும் வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம்

எழுத்தாளர் Staff Writer

27 Nov, 2013 | 2:12 pm

தாதியர்கள்,  தகுதிகாண் மற்றும் தற்காலிக மருத்துவ அதிகாரிகளின்  ஒன்றிணைந்த சபையின் 16 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுகாதார உத்தியோகத்தர்கள் இன்று காலை 7 மணிமுதல் முன்னெடுத்துவரும் 48 மணிநேர பணிப் பகிஷ்கரிப்பினால் அரச வைத்தியசாலைகளின் சிகிச்சை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

வெளிநோயாளர் பிரிவிலுள்ள வைத்தியர்கள் மருந்துச் சீட்டுக்களை வழங்கியபோதிலும் நோயாளர்களுக்கு மருந்துகளை வழங்குவதற்கான மருந்தாளர்கள் இல்லை என எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சில வைத்தியசாலைகளில்  சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதில் நோயாளர்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

அம்பாறை மாவட்டத்தில் வைத்தியசாலைகளில் செயற்பாடுகள் ஓரளவு ஸ்தம்பிதமடைந்துள்ளன, மன்னார் மாவட்டத்தில் வைத்தியர்களின் ஒத்துழைப்புடன் சிகிச்சைகள் உரிய முறையில் இடம்பெற்றுவருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, புத்தளத்திலும் ஓரளவு மந்தகதியில் வைத்திய சேவைகள் இடம்பெற்றுவருவதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

மலையகத்தின் சில வைத்தியசாலையிலும் பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெற்றுவருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்