தங்கம் கடத்த முயன்ற இலங்கையர்கள் கைது

தங்கம் கடத்த முயன்ற இலங்கையர்கள் கைது

தங்கம் கடத்த முயன்ற இலங்கையர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

27 Nov, 2013 | 3:46 pm

பட்டை தீட்டப்படாத தங்கத்தை சென்னைக்கு கொண்டுசெல்ல முயற்சித்த மூன்று இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்த தங்கத்தின் பெறுமதி 33 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமென சுங்கப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

களுபோவில பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்களும், சிறுமியொருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மூவருக்கும் தலா பத்தாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு, அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும், தங்கம் அரசுடமையாக்கப்பட்டதாகவும் சுங்கப் பிரிவு குறிப்பிட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்