ஜெயபாலன் நாடுகடத்தப்பட்டுள்ளார்

ஜெயபாலன் நாடுகடத்தப்பட்டுள்ளார்

ஜெயபாலன் நாடுகடத்தப்பட்டுள்ளார்

எழுத்தாளர் Staff Writer

27 Nov, 2013 | 1:47 pm

கவிஞரும், தென்னிந்திய நடிகருமான வி.ஐ.எஸ்.ஜெயபாலன் நேற்றிரவு நாடுகடத்தப்பட்டுள்ளார்.

நோர்வே பிரஜையான இவர் சுற்றுலா வீசா விதிமுறைகளை மீறி செயற்பட்டமையால் கைதுசெய்யப்பட்டு, குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்றிரவு துருக்கி ஊடாக நோர்வேக்கு ஜெயபாலன் நாடு கடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இந்தியாவில் இருந்து இலங்கை வந்திருந்த வி.ஐ.எஸ்.ஜெயபாலன், வீசா விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியாவில் பயங்கரவாத தடுப்புப் பிரிவால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

மிரிஹான தடுப்பு முகாமுக்கு கடந்த சனிக்கிழமை மாற்றப்பட்ட அவர் குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

நோர்வே தூதரகத்தினர் நேற்று முன்தினம் அவரை சந்தித்ததை அடுத்து, நேற்றிரவு அவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட வி.ஐ.எஸ்.ஜெயபாலன் பல தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்