சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் வீட்டின் மீது தாக்குதல்

சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் வீட்டின் மீது தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

27 Nov, 2013 | 9:52 pm

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதேச சபையின் ஆளும்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினரான ஸ்ரீஸ்கந்தராஜாவின் வீட்டின்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள்களில் வந்ததாக கூறப்படும் அடையாளம் தெரியாத சிலர் வீட்டின் மீது இன்று அதிகாலை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

தனது வீட்டின் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து பிரதேச சபை உறுப்பினர் ஸ்ரீஸ்கந்தராஜா கருத்து தெரிவித்தார்….

ஸ்ரீஸ்கந்தராஜா தெரித்த கருத்து :-

“இன்று அதிகாலை 1.50 அளவில் எனது வீட்டுக்கு ஆறு மோட்டார் சைக்கிள்களில் இனந்தெரியாத நபர்கள் வந்தார்கள். அதற்கு முன்னர் 12 மணியளவில் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்று எனது வீட்டுக்கு அருகில் வந்து நின்று போகும் போது ஏதோ பிரச்சினை இருப்பதை அவதானித்துக் கொண்டு நான் மிகவும் எச்சரிக்கையாக இருந்தேன். அதன் பிற்பாடு 1.50 அளவில் ஆறு மோட்டார் சைக்கிள்களில் வந்து இறக்கினார்கள். இறங்கும் போது நான் எனது மனைவி பிள்ளைகளுடன் ஓடித் தப்பினேன். இவர்கள் வந்து பெற்றோல் குண்டுகள், பயங்கர வாள்கள் போன்ற ஆயுதங்களால் எனது வீட்டை அடித்து நொருக்கி வீட்டில் இருந்த பொருட்களையும் தீ வைத்து கொழுத்தி விட்டு நான் அயலவர்களின் உதவிகளுடன் கத்தும் போது உடனடியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு அந்த இடத்தைவிட்டு தப்பிச் சென்று விட்டார்கள்”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected]wsfirst.lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்