சர்வதேச வர்த்தக உடன்படிக்கை மீதான பேச்சுவார்த்தை தோல்வியடையலாம் –  உலக வர்த்தக ஸ்தாபனம்

சர்வதேச வர்த்தக உடன்படிக்கை மீதான பேச்சுவார்த்தை தோல்வியடையலாம் – உலக வர்த்தக ஸ்தாபனம்

சர்வதேச வர்த்தக உடன்படிக்கை மீதான பேச்சுவார்த்தை தோல்வியடையலாம் – உலக வர்த்தக ஸ்தாபனம்

எழுத்தாளர் Staff Writer

27 Nov, 2013 | 8:55 pm

சர்வதேச வர்த்தக உடன்படிக்கை குறித்த பேச்சுவார்த்தை முறிவடையும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக உலக வர்த்தக ஸ்தானபம் எச்சரித்துள்ளது.

வர்த்தக அமைச்சர்களின் சந்திப்பில் அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்த உடன்படிக்கை தொடர்பான வரைபை உலக வர்த்தக ஸ்தாபனத்தின் உறுப்பினர்கள் அங்கீகரிக்காத நிலையில் இந்த  கருத்து வெளியாகியுள்ளது.

உலக வர்த்தக ஸ்தானபம் உருவாக்கப்பட்ட பின்னர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த உடன்படிக்கை மூலம் உலகப் பொருளாதாரத்தில் மேலும் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை இணைக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடுமையான அரசியல் கோரிக்கைகளை விடுப்பதை நிறுத்துமாறு குறிப்பிட்ட ஸ்தானத்தின் தலைவர் அசிடெவோ, இவ்வாறான கருத்துக்கள் உறுப்ப நாடுகளை பெரிதும் பாதிப்பதாக குறிப்பிட்டார்.

இது உடன்படிக்கையின் இறுதி இணக்கப்பாட்டை எட்டுவதற்கு தடையை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்