ஒரு நாள் தொடர் இந்தியா வசம்

ஒரு நாள் தொடர் இந்தியா வசம்

ஒரு நாள் தொடர் இந்தியா வசம்

எழுத்தாளர் Staff Writer

27 Nov, 2013 | 6:22 pm

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்று போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 க்கு 1 என்ற ஆட்டக்கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

கன்பூரில் நடைபெற்ற தொடரின் இறுதிப் போட்டியில் 264 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 46 தசம் ஒர் ஒவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 266 ஒட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஷீக்கர் தவான் 95 பந்துகளில் 119 ஓட்டங்களையும், யுவராஜ் சிங் 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ரவி ராம்போல் மற்றும் டுவைய்ன் பிராவோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 263 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது,.

மார்லன் சாமுவேல்ஸ் 71 ஓட்டங்களையும் கீரன் பவல் 70 ஓட்டங்களையும் பெற்றனர்.

ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டு விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதுடன், புவனேஸ்வர் குமார், மொஹமட் சமி அஹமட், மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்

போட்டியின் சிறப்பாட்டகாரராக ஷீக்கர் தவானும், தொடரின் சிறப்பாட்டகாரராக விராட் கோலியும் தெரிவுசெய்யப்பட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்