உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி

உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி

உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

27 Nov, 2013 | 11:45 am

ஹொரவ்வப்பொத்தானையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை புத்தளம் வீதியில் வேகமாக பயணித்த உழவு இயந்திரம் வீதியை விட்டு விலகி கொங்கிறீட் தூண் ஒன்றில் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த மற்றுமொருவர் ஹொரவ்வபொத்தானை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

இந்த விபத்து நேற்று இரவு 7.40 அளவில் இடம்பெற்றுள்ளது, காயமடைந்த உழவு இயந்திரத்தின் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளது.

இந்த வாகன விபத்து தொடர்பில் ஹெரவபொத்தானை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்