ஷஹீர் கான் அணிக்கு உள்வாங்கப்பட்டமை வளர்ச்சிக்கு உதவி புரியும்  – உமேஸ் யாதவ்

ஷஹீர் கான் அணிக்கு உள்வாங்கப்பட்டமை வளர்ச்சிக்கு உதவி புரியும் – உமேஸ் யாதவ்

ஷஹீர் கான் அணிக்கு உள்வாங்கப்பட்டமை வளர்ச்சிக்கு உதவி புரியும் – உமேஸ் யாதவ்

எழுத்தாளர் Staff Writer

26 Nov, 2013 | 12:59 pm

ஷஹீர் கான் இந்திய அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளமை பந்துவீச்சாளராக தமது வளர்ச்சிக்கு உதவி புரியும் என உமேஷ் யாதேவ் தெரிவித்துள்ளார்.

சுமார் ஒரு வருடத்தின் பின்னர் தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ள இந்திய டெஸ்ட் அணியில் இணைக்கப்பட்டதை தொடர்ந்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் வழிநடத்தும் திறமையில் இளையவர்களிடையே ஷஹீர் கானுக்கு செல்வாக்கு உள்ளதாக உமேஸ் யாதேவ் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் ஷஹீர் கானிடம் இருந்து வேகப்பந்துவீச்சுத் தொடர்பான பெறுமதியான ஆலோசனை பெற்றுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஷஹீர்கானை விட ரீவேஸ் சுவிங் பந்துவீச்சில் திறமையானர் இல்லை எனவும் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதேவ் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்