வெல்லாவெளி லொறி விபத்துடன் தொடர்புடைய சாரதி கைது

வெல்லாவெளி லொறி விபத்துடன் தொடர்புடைய சாரதி கைது

வெல்லாவெளி லொறி விபத்துடன் தொடர்புடைய சாரதி கைது

எழுத்தாளர் Staff Writer

26 Nov, 2013 | 4:21 pm

மட்டக்களப்பு, வெல்லாவெளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

லொறி ஒன்றும் முச்சக்கரவண்டியும் மோதி இன்று முற்பகல் 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் களுவாஞசிக்குடி மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய சாரதி உட்பட லொறி மற்றும் முச்சக்கரவண்டியும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்