வெங்காய விதை உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படும் – எஸ்.சீ.வணிகசூரிய

வெங்காய விதை உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படும் – எஸ்.சீ.வணிகசூரிய

வெங்காய விதை உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படும் – எஸ்.சீ.வணிகசூரிய

எழுத்தாளர் Staff Writer

26 Nov, 2013 | 12:49 pm

எதிர்காலத்தில் வெங்காய விதை உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக  தேசிய விதை நடுகை பொருட்களின் அபிவிருத்தி நிலையம் தெரிவிக்கின்றது.

தேசிய சந்தையில் உள்நாட்டு பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்தமை இதற்கு காரணம் என நிலையத்தின் மேலதிக பணிப்பாளர் எஸ்.சீ.வணிகசூரிய கூறுகின்றார்.

பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளமையால் விவசாயிகள் தமது அனைத்து அறுவடைகளையும் விற்பனை செய்வதற்கு தயாராகியுள்ளதாக தேசிய விதை நடுகை பொருட்களின் அபிவிருத்தி நிலையம் சுட்டிக்காட்டுகின்றது.

இதனால் குறுகிய கால பயிற்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும், அடுத்த போகத்திற்கு வெங்காய விதைகளை வைத்துக் கொள்ளுமாறு நிறுவனத்தின் மேலதிக பணிப்பாளர் விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் விதை உற்பத்தியை மேம்படுத்தும் நடவடிக்கைகளை விவசாய அமைச்சு மற்றும் விவசாயத் திணைக்களம் ஆகியன முன்னெடுத்துள்ளதாக அவர் கூறினார்.

தற்போது சந்தையில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளமையால், அடுத்த போகத்தின்போது வெங்காயத்திற்கு அதிக கேள்வி நிலவும் எனவும் எதிர்பார்ப்பதாக மேலதிக பணிப்பாளர் எஸ்.சீ.வணிகசூரிய மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்