ரத்துபஸ்வெல பிரச்சினை தொடர்பான விசாரணைகள் நிறைவு

ரத்துபஸ்வெல பிரச்சினை தொடர்பான விசாரணைகள் நிறைவு

ரத்துபஸ்வெல பிரச்சினை தொடர்பான விசாரணைகள் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

26 Nov, 2013 | 12:27 pm

ரத்துபஸ்வெல பிரச்சினை தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

இந்த விடயம் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் சாட்சியங்களை பதிவு செய்துள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீப மஹானாமஹேவா குறிப்பிட்டார்.

இறுதி அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக் காட்டியது.

ஆணைக்குழு இந்த விடயம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பிரதீப மஹானாமஹேவா தெரிவித்தார்.

சிவில் மக்கள், சிவில் அமைப்புக்கள், ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள், அரச ஊழியர்கள், பொலிஸார், இராணுவத்தினர் ஆகியோரிடம் நேரடியாக வாக்குமூலங்கள் பதிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

ரத்துபஸ்வெல பகுதிக்கு நேரடியாகச் சென்று விடயங்களை சேகரித்ததாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்