ரத்துபஸ்வெல பிரச்சினை; காரணங்களை முன்வைப்பதற்கு அறிவித்தல்

ரத்துபஸ்வெல பிரச்சினை; காரணங்களை முன்வைப்பதற்கு அறிவித்தல்

ரத்துபஸ்வெல பிரச்சினை; காரணங்களை முன்வைப்பதற்கு அறிவித்தல்

எழுத்தாளர் Staff Writer

26 Nov, 2013 | 8:46 pm

ரத்துபஸ்வல குடிநீர் பிரச்சினை தொடர்பில் காரணங்களை முன்வைப்பதற்காக மத்திய சுற்றாடல் அதிகார சபை, முதலீட்டு சபை மற்றும் சர்ச்சையைத் தோற்றுவித்த தொழிற்சாலையுடன் தொடர்புடையவர்களுக்கு அறிவித்தல் விடுவிக்கப்பட்டுள்ளது.

சூழல் நீதிக்கான கேந்திர நிலையம், சியனே நீர் பாதுகாப்பு அமைப்பு என்பவற்றின் ஏற்பாட்டாளர் எச். பிரமித குமார, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த பின்னரே நீதிமன்றம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

சம்பந்தப்பட்ட தொழிற்சாலையினால் முன்னெடுக்கப்படும் உற்பத்திகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரில் அதிகமான இரசாயன பொருட்கள் காணப்படுவதாகவும், சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரத்தின் பிரகாரமே தொழிற்சாலை நடத்திச் செல்லப்பட வேண்டும் எனவும் அந்த அறிவித்திலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரிகளும், முதலீட்டு சபையும் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தாமல் அனுமதிப்பத்திரம் வழங்கியுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்