யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை – சுரேஷ் பிரேமசந்திரன்

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை – சுரேஷ் பிரேமசந்திரன்

எழுத்தாளர் Staff Writer

26 Nov, 2013 | 8:05 pm

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட எந்தவொரு வரவு – செலவுத்திட்டத்திலும், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரத்தியேகமாக நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த கருத்தினை குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே வட மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டது எனக் கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சபையில் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்