பொதுநலவாய பளு தூக்கல் போட்டிகளில் தினுதா அபேசேகர சாதனை

பொதுநலவாய பளு தூக்கல் போட்டிகளில் தினுதா அபேசேகர சாதனை

எழுத்தாளர் Staff Writer

26 Nov, 2013 | 9:02 pm

பளு தூக்கல் போட்டிகளில் மகளிருக்கான 48 கிலோகிராம் எடைப் பிரிவில் தினுதா அபேசேகர இலங்கை சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

பொதுநலவாய பளுதூக்கல் போட்டிகளில் இந்த சாதனையை நிலைநாட்டிய அவர், அந்தப் போட்டிப் பிரிவில் தங்கப்பதக்கத்தையும் சுவீகரித்தார்.

16 வயதுடைய தினுதா அபேசேகர பொலன்னறுவை ரோயல் கல்லூரியின் ஊடாக பளு தூக்கல் போட்டிகளில் பிரவேசித்துள்ளார்.

ஸ்போர்ட்ஸ் பெஸ்டின் வறுமையிலும் திறமை விசேட தொகுப்பின் ஊடாக முழு நாட்டுக்கும் அறிமுகமான அவர் 48 கிலோ கிராம் எடைப்பிரிவில் தேசிய சாம்பியனாவார்.

இந்நிலையில் மலேஷியாவில் நடைபெறும் பொதுநலவாய பளுதூக்கல் போட்டிகளில் க்ளீன் அன்ட் ஜர்க் பிரிவில் 74 கிலோ கிராமும், ஸ்னெச் பிரிவில் 62 கிலோ கிராமும் அடங்கலாக மொத்தம் 136 கிலோ கிராம் எடையைத் தூக்கிய தினுதா அபேசேகர தங்கப்பதக்கத்தை வென்றார்.

இதன் மூலம் பொதுநலவாய விளையாட்டு விழாவில் பளு தூக்கல் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இலங்கை வீராங்கனை என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.

இதேவேளை, சிரேஷ்ட ஆடவருக்கான 62 கிலோ கிராம் எடைப் பிரிவில் கடற்படை கழக வீரரான இந்திக திசாநாயக்க வெண்கலப்பதக்கம் வென்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்