பங்களாதேஷில் ஜனவரி பாராளுமன்றத் தேர்தல்

பங்களாதேஷில் ஜனவரி பாராளுமன்றத் தேர்தல்

பங்களாதேஷில் ஜனவரி பாராளுமன்றத் தேர்தல்

எழுத்தாளர் Staff Writer

26 Nov, 2013 | 11:14 am

பங்களாதேஷில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் 48 மணி நேர வீதி, ரயில் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து மறிப்பு போராட்டத்தில் எதிர்கட்சிகள் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது ஆட்சியிலுள்ள ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் பதவி விலக வேண்டுமெனவும், தேர்தலுக்கு முன்னர் இடைகால அரசாங்கத்திடம் அதிகாரம் கையளிக்கப்பட வேண்டும் எனவும் எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

எனினும் இந்தக் கோரிக்கையை ஷேக் ஹசீனா நிராகரித்துள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களை இடைகால அரசாங்கம் மேற்பார்வை செய்த போதிலும், 2011 ஆம்ஆண்டு அதற்கான ஏற்பாடுகளை ஷேக் ஹசீனா இல்லாது செய்திருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்