நேபாளத்தில் தொன்மையான பௌத்த விகாரையின் சிதைவுகள் கண்டுபிடிப்பு

நேபாளத்தில் தொன்மையான பௌத்த விகாரையின் சிதைவுகள் கண்டுபிடிப்பு

நேபாளத்தில் தொன்மையான பௌத்த விகாரையின் சிதைவுகள் கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Nov, 2013 | 3:15 pm

நேபாளத்தின், லும்பினியில் அகழ்வுகளில் ஈடுபட்ட தொல்பொருள் ஆய்வாளர்களால் உலகில் இதுவரை இல்லாத மிகவும் தொன்மையான பௌத்த விகாரையின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

லும்பினியிலுள்ள மாயாதேவி மதஸ்லத்தின் மர கட்டமைப்பிற்குள் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட இந்த சிதைவுகள் கிறிஸ்துக்கு முன்னர் 6 நூற்றாண்டிற்கு உரியது என பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

சித்தார்த்த கௌதம புத்தரின் பிறப்பிடமாக கருதப்படும் லும்பினி பகுதி, யுனெஸ்கோவினால் தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் டேஹம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரொபின் கொனிங்ஹம் தலைமையிலான சர்வதேச ஆய்வாளர்கள் குழுவினால், தற்போது இந்தப் பகுதியில் அகழ்வாராச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

உலகில் இதுவரை கண்டறியப்படாத பௌத்த விகாரை தொடர்பான சாட்சியங்களே இந்த சிதைவுகள் என பேராசிரியர் ரொபின் கொனிங்ஹம் தெரிவித்தார்.

புத்தரின் பிறப்பிடம் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்வதற்கு இந்த புதிய கண்டுபிடிப்புக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என நேபாள கலாசார அமைச்சர் ராம்குமார் ஷெரெஸ்டா குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்