தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

26 Nov, 2013 | 7:33 pm

கனடாவில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சரின் இணைப்புச் செயலாளராக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட சந்தேகநபரும், மற்றுமொருவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

இந்த சந்தேகநபர்கள், சுமார் ஆறு இலட்சம் ரூபாவை அபகரிப்பதற்கு முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பலாங்கொடை மற்றும் அங்குருவெல்ல பகுதிகளைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களே வாழைத்தோட்டம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமைச்சர்களின் இணைப்புச் செயலாளர்கள் என்ற போர்வையில் வெளிநாட்டு தொழில்கள் மற்றும் வீசா பெற்றுத் தருவதாக கூறி, நபர்களிடம் பண மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அண்மைக் காலத்தில் பதிவாகி வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

இதுபோன்ற மோசடி பேர்வழிகளிடம் சிக்கிக்கொள்ள வேண்டாம் என பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்