தலைமைத்துவத்தை வழங்கினால் அசைக்க முடியாத அரசாங்கத்தை அமைப்போம் – மைத்திரி குணரட்ன

தலைமைத்துவத்தை வழங்கினால் அசைக்க முடியாத அரசாங்கத்தை அமைப்போம் – மைத்திரி குணரட்ன

எழுத்தாளர் Staff Writer

26 Nov, 2013 | 10:08 pm

“ஜாதிக பவுர “அமைப்பு நேற்று கொழும்பில் கூட்டம் ஒன்றை நடத்தியது.

தலைமைத்துவ சபையின் கபடத்தனத்தை வெளிப்படுத்துவோம் – தோல்வியடைந்தது போதும் ரணில் வெளியேர வேண்டும் என்ற தலைப்பிலேயே இந்த கூட்டம் இடம் பெற்றது.

இந்த கூட்டம் கொழும்பு பொது நூலகத்தில் இடம் பெற்றது .

உலபனே சுமங்கள தேரர்- தேசிய அமைப்பாளர் ஐக்கிய பிக்கு முன்னணி

இந்த தலைவரினால் மேற்கொள்ளப்படும் தன்னிச்சையானதும் முட்டாள்தனமானதுமான தீர்மாணங்கள் கட்சியின் வெற்றியை தடுத்துள்ளது. கட்சியை வெற்றிப்பெறச் செய்ய வேண்டுமாயின் இந்த தலைவர் வீட்டுக்குச் செல்ல வேண்டும். அரசாங்கத்தை தோல்வியடையச் செய்யக் கூடிய வாக்கு இங்கு காணப்படுகின்றது .ஆனால் அதனை நிர்வகித்து வெற்றிப் பாதையில் கொண்டுச் செல்லக் கூடிய வலுவான தலைவர்கள் எதிர் கட்சியில் இல்லை.தற்போதுள்ள தலைவருக்கு முதுகெழும்பில்லை . ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுக்கவும் கட்சியிலிருந்து விரட்டியடிக்கவுமே இவரால் முடியும்.ஐக்கிய தேசிய கட்சியால் அரசாங்கத்திலிருந்து ஒருவரையும் உள்வாங்க வில்லை. மங்கள சமரவீரவை மாத்திரம் எடுத்துக்கொண்டனர்.இவர் கடசிக்கு இறுதி கிரியைகளை செய்தார்..-

மேல் மாகாணச் சபை உறுப்பினர் சட்டதரணி ஷிரால் லக்திலக –

“தலைமைத்துவ சபைக்கு நாங்கள் எதிர்ப்பை வெளியிடுகின்றோம்.நாங்கள் 4 காரணங்களை கூறுகின்றோம்.செயற் குழுவை நியமிக்கும் அதிகாரம்,தேசிய நிறைவேற்று சபையை கூட்டும் அதிகாரம்,பொருளாலர் மற்றும் பொதுச் செயலாளரை நியமிக்கும் அதிகாரம் மற்றும் உறுப்பினர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கட்டளையிடும் அதிகாரம் என்பவையாகும்.9 , 8  அதிகாரங்களையும் இதனோடு வழங்க வேண்டும். இவற்றை தவிர்த்து முன்னனெடுக்கப்படுகின்ற விடயங்களுக்கு நாங்கள் தயாரில்லை. இதனை ஆதரவாளர்களின் பேரிலேயே கூறுகின்றோம்.இந்த கட்சியை வெற்றிப் பெற செய்யவே இவை எமக்கு தேவைப்படுகின்றது.ரணில் இருக்கும் வரை வாக்களிக்க மாட்டர்கள் , இது தான் உண்மை”

தென் மாகாணச் சபை உறுப்பினர் சட்டதரணி  மைத்திரி குணரட்ன –

“வெற்றிப் பெறும் ஐக்கிய தேசியக் கட்சியே எமக்கு தேவை. இந்த கட்சியை வெற்றிப் பெறச் செய்ய வேண்டும். இதற்காகவே போராடுகின்றோம். சிறிகொத்தவில் பூதங்கள் இருப்பதனால் கட்சியை  வெற்றிப் பெறச் செய்ய முடியாது என  கட்சியின் முன்னால் தவிசாளர் கூறுகின்றார்.நீங்கள் கண்டீர்களோ தெரியவில்லை , சஜித் பிரமதாசவிற்கு தலைமைத்துவத்தை வழங்கினால் அனைத்தும் சரியாகிவிடும்.மூன்று மாதத்திற்குள் ஆட்சியை கைப்பற்றி 25 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாத அரசாங்கத்தை அமைப்போம் என கூறி இதற்கு வாழ்த்து கூறுகின்றேன்”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்