டில்லியில் பிள்ளையை கொலை செய்த பெற்றோருக்கு ஆயுள் தண்டனை

டில்லியில் பிள்ளையை கொலை செய்த பெற்றோருக்கு ஆயுள் தண்டனை

டில்லியில் பிள்ளையை கொலை செய்த பெற்றோருக்கு ஆயுள் தண்டனை

எழுத்தாளர் Staff Writer

26 Nov, 2013 | 9:35 pm

இந்தியாவின் டில்லியில் தமது பெண் பிள்ளையை கொலை செய்த பெற்றோருக்கு  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.

வைத்தியர்களான  ராஜேஸ் தல்வார் மற்றும் நுபுர் தல்வார் தம்பதிகளுக்கே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

2008 ஆம் ஆண்டு தமது ஒரே மகளான ஆருஷி மற்றும் பணியாளரான ஹேமராஜ் ஆகியோரை இந்தத் தம்பதியினர் கொலை செய்துள்ளமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது..

வீட்டு  பணியாளருக்கும் மகளுக்கும் இடையிலிருந்த தொடர்பினால்  சீற்றமடைந்த பெற்றோர், இந்தக் கொலைகளை மேற்கொண்டுள்ளமை  தெரியவந்துள்ளது.

மத்திய புலனாய்வு பிரிவின் ஒத்துழைப்புடன் இந்த வழக்கு விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்