ஜெனீவா பேச்சுவார்த்தை இடைக்கால அரசாங்கத்திற்கான சிறந்த சந்தர்ப்பம் – ஒபாமா

ஜெனீவா பேச்சுவார்த்தை இடைக்கால அரசாங்கத்திற்கான சிறந்த சந்தர்ப்பம் – ஒபாமா

ஜெனீவா பேச்சுவார்த்தை இடைக்கால அரசாங்கத்திற்கான சிறந்த சந்தர்ப்பம் – ஒபாமா

எழுத்தாளர் Staff Writer

26 Nov, 2013 | 1:28 pm

ஜெனீவாவில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை சிரியாவில் இடைகால அரசாங்கத்தை அமைப்பதற்கான சிறந்த சந்தர்ப்பம் என அமெரிக்கா கூறியுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 22 ஆம் திகதி அரச மற்றும் எதிர்த்தரப்பினர் முதல் முறையாக சந்திக்கவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

பாதிப்பு மற்றும் அழிவுகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இந்த சந்தர்பத்தை பயன்படுத்த வேண்டும் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டு தரப்பினையும் பேச்சுவார்த்தைககளில் கலந்துகொள்ளச் செய்வது அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் முயற்சிகளை மேறகொண்டுள்ளன.

எதிர்த்தரப்பினை பிரதிநிதித்துவப்படுத்தி யார் கலந்துகொள்வது மற்றும் ஜனாதிபதி பஷார் அல் அசாத்தின் நிலைப்பாடு தொடர்பான சர்ச்சை தொடர்ந்தும் நீடிக்கின்றது.

சர்ச்சைக்குரிய அணுத் திட்டங்கள் குறித்து ஈரானுடன் உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதை தொடர்ந்து சிரிய விவகாரத்தில் திரும்புமுனை ஏற்படலாம் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.

சிரிய மக்களின் சுதந்திரம் மற்றும் கண்ணியம் தொடர்பான விருப்பங்களை சட்டரீதியாக முழுமையடையச் செய்யும் அமைதியான அதிகார மாற்றத்திற்கான தளமாக ஜெனீவா மாநாடு அமையும் என பான் கீ மூன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்