சன்னி லியோனுக்கு கிளம்பியுள்ள புதிய எதிர்ப்பு

சன்னி லியோனுக்கு கிளம்பியுள்ள புதிய எதிர்ப்பு

சன்னி லியோனுக்கு கிளம்பியுள்ள புதிய எதிர்ப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Nov, 2013 | 2:44 pm

ஆபாசப்பட நடிகையான சன்னி லியோன் தமிழ் படங்களில் நடிப்பதற்கு  இந்து மக்கள் கட்சி எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

சன்னி லியோன் ஜிஸ்சம்2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார்.

தற்போது பரத்துடன் இந்திப் படமொன்றில் நடித்து வருகிறார். இதன் பின்னர் தயாநிதி அழகிரி தயாரிக்கும் வடகறி படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடுவதற்கு சன்னி லியோன் ஒப்பந்தமாகியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க சன்னி திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது.

இந்நிலையில் இவரது தமிழ் வருகைக்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் “சன்னி லியோன் போன்ற ஆபாசப்பட நடிகைகளை அனுமதித்தால் தமிழ்நாடு அத்தகைய நடிகைகள் சுதந்திரமாக நடமாட வசதியாகிவிடும்.

மேலும் ஆபாசப்படங்கள் தவறானதல்ல என்ற கருத்து உருவாகிவிடும். இது தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, தமிழ் கலாச்சாரத்துக்கே முரணாகிவிடும். ஒரு போதும் சன்னி லியோன் தமிழ் படத்தில் நடிப்பதை அனுமதிக்க மாட்டோம். அதை உரிய வகையில் தடுத்து நிறுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்