கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் தனியார் பஸ் சேவை ஆரம்பம்

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் தனியார் பஸ் சேவை ஆரம்பம்

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் தனியார் பஸ் சேவை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

26 Nov, 2013 | 12:35 pm

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் தனியார் பஸ் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டது.

தற்போது கொழும்பில் இருந்து நீர்கொழும்பிற்கு 12 பஸ்கள் சேவையில் ஈடுபடுவதாக மாகாண போக்குவரத்து அமைச்சர் உபாலி கொடிகார தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களில் மேலும் சில பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.

பயணிகளின் வசதிகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண போக்குவரத்து அமைச்சர் உபாலி கொடிகார மேலும் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்