ஈரானுடனான உடன்படிக்கையை நியாயப்படுத்தியுள்ளார் ஒபாமா

ஈரானுடனான உடன்படிக்கையை நியாயப்படுத்தியுள்ளார் ஒபாமா

ஈரானுடனான உடன்படிக்கையை நியாயப்படுத்தியுள்ளார் ஒபாமா

எழுத்தாளர் Staff Writer

26 Nov, 2013 | 11:20 am

ஈரான் உடனான இடைக்கால உடன்படிக்கையை அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா நியாயப்படுத்தியுள்ளார்.

தடைகள் தொடர்ந்தும் உள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள பரக் ஒபாமா எனினும் கடினமான மற்றும் போலியான பேச்சுவார்த்தை அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாது என குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமது அணுச் செயற்பாடுகளை குறைப்பதற்கு ஈரான் இணக்கம் தெரிவித்ததுடன்,  அதற்கு பதிலாக ஈரான் மீதான தடைகள் தளர்த்தப்படவுள்ளன.

இந்த உடன்படிக்கையை ஏனைய நாடுகள் வரவேற்றுள்ள போதிலும், ஈரானுடன் முரண்பட்டுள்ள இஸ்ரேல் இது வரலாற்று ரீதியான தவறு என கூறியிருந்தது.

அத்துடன் இந்த உடன்படிக்கை இலகுவான ஒன்றாக உள்ளதாக  விமர்சனம் வெளியிட்டுள்ள அமெரிக்க செனட் உறுப்பினர்கள் சிலர், ஈரானுக்கு எதிராக புதிய தடைகளை விதிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்