ஆண்டின் சிறந்த மனிதருக்கான பட்டியலில் நரேந்திர மோடி

ஆண்டின் சிறந்த மனிதருக்கான பட்டியலில் நரேந்திர மோடி

ஆண்டின் சிறந்த மனிதருக்கான பட்டியலில் நரேந்திர மோடி

எழுத்தாளர் Staff Writer

26 Nov, 2013 | 2:44 pm

2013 ஆம் ஆண்டிற்கான ‘டைம்ஸ்’ சஞ்சிகையின் சிறந்த மனிதருக்கான  இறுதிப் பட்டியலில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

ஒன்லைய்ன் மூலமான வாக்கெடுப்பில் மக்களின் விரும்பத்திற்கு உரிய ஒருவராக நரேந்திர மோடி காணப்பட்டதுடன், இறுதிப் பட்டியலில் உள்ள ஒரே ஒரு இந்தியராகவும் பதிவாகியுள்ளார்.

உலகளாவிய தலைவர்கள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் ஏனைய பிரபலங்கள் அடங்கலாக 42 பேர் இறுதிப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டிற்கான ‘டைம்ஸ்’ இதழின் சிறந்த நபரை தேர்வு செய்ய டைம்ஸ் இதழ் ஆன்லைனில் நடத்திய வாக்கெடுப்பில்இ இதுவரை மோடிக்கு 25மூ வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிகிறது. 25மூ வாக்குகளுடன் மோடி முதலிடத்தில் உள்ளார். ஆன்லைனில் பதிவான ஓட்டுகளின் அடிப்படையில் டைம்ஸ் இதழ் சர்வதேசத் தலைவர்கள்இ தொழில் முனைவோர்இ பிரபலமானவர்கள் என 42 பேரை இறுதியாகப் பட்டியலிட்டுள்ளது. இந்த 42 பேரில்இ 2013-ஆம் ஆண்டிற்கான சிறந்த நபர் யார் என்பதை அடுத்த மாதம் அறிவிக்க இருக்கிறது.

இந்தப் பட்டியலில்இ ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப் சாஹி அமேசான் சி.இ.ஓ. ஜெஃப் பெசோஸ் மற்றும் அமெரிக்க ராணுவ ரக்சியங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்நோடன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டிற்கான நபராக டைம்ஸ் பத்திரிகை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை தேர்வு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி குறித்து ஆன்லைனில் ஓட்டளிக்கும் இடத்தில் ” சர்ச்சைக்குரிய இந்து தேசியவாதிஇ குஜராத் மாநிலத்தின் முதல்வர் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டை ஆளும் காங்கிரஸ் கட்சியை பதவியிழக்கச் செய்யும் வேட்பாளராக கருதப்படுபவர்” என டைம்ஸ் இதழ் அறிமுகப்படுத்தியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்